Tuesday, March 16, 2010

Latest news on AIIMS hospital in chennai - it is coming

Following is the news from DINAMALAR about AIIMS in Chennai -

மதுரை தோப்பூரில் "எய்ம்ஸ்' மாதிரி மருத்துவமனை கட்டுமான பணியை அடுத்தாண்டு செப்டம்பருக்குள் முடிக்க மத்திய அரசு திட்டமிடப்பட்டுள்ளது. இக்கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்தாண்டு பிப். 27ல் நடந்தது. மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையை மேம்படுத்த 25.82 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. மேலும், கட்டட பணிக்கு 55 கோடி ரூபாய், மருத்துவ கருவிகள் மற்றும் வாகனங்கள் வாங்க 49.18 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. மருந்துகள் வாங்க 2.5 கோடி ரூபாய், சர்ஜிக்கல் 1.5 கோடி ரூபாய், கட்டட பராமரிப்பு 50 லட்சம் ரூபாய், மின் பராமரிப்பு 20 லட்சம் ரூபாய், மருத்துவ கருவிகள் பராமரிப்பு ஒரு கோடி ரூபாய், மருத்துவம் இல்லாத கருவிகள் பராமரிப்பு 40 லட்சம் ரூபாய் உட்பட மொத்தம் 19.97 கோடி ரூபாய் இதில் அடங்கும். மொத்தம் 320 படுக்கைகளுடன் ஆறு மாடி கட்டடம் அமைகிறது. அடிக்கல் நாட்டப்பட்டு ஓராண்டாகியும், தமிழக அரசு சார்பில் அனைத்து ஒத்துழைப்பும் தரும் நிலையிலும், இன்னும் கட்டுமான பணியை மத்திய அரசு துவங்கவில்லை. இதற்கிடையே, கட்டுமான பணியை அடுத்தாண்டு செப்டம்பருக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ""கட்டுமான பணியை மேற்கொள்ளும் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனம், ஒன்பது மாதங்களில் கட்டடத்தை கட்டி, மருத்துவமனை நிர்வாகத்திடம் ஒப்படைக்கும்,'' என்று டீன் சிவக்குமார் தெரிவித்தார். கட்டுமான பணி அடுத்தாண்டு ஜனவரியில் ஆரம்பிக்கப்படலாம் என தெரிகிறது.

1 comment:

  1. It is comming ... comming ..comming.....comming......

    Govt which hs infuence in centre should push to start immediately.

    ReplyDelete